
பெர்லின்,
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த ஸ்டட்கார்ட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), ஜெலினா ஓஸ்டாபென்கோ (லாத்வியா) மோதினர்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஓஸ்டாபென்கோ 6-4 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த தொடரின் இரட்டையர் பிரிவில் எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.