
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் 'வெண்ணிலா கபடிகுழு' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து "ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன்" என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களின் 4-வது திருமண நாளான இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. மீண்டும் தந்தையான நடிகர் விஷ்ணு விஷால் இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஷ்ணு விஷால் ஏற்கனவே ரஜினி நட்ராஜ் என்பவரை 2010-ம் ஆண்டு திருமணம் செய்து சில கருத்து வேறுபாடு காரணத்தினால் அவரை 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.