ஸ்கூட்டரை வழிமறித்து நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

23 hours ago 3

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பானசவாடி ஹெண்ணூர் மெயின் ரோட்டில் சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அதாவது அவர் தனது தோழி வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் அந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று ஸ்கூட்டரை மர்மநபர்கள் வழிமறித்தனர்.

பின்னர் 2 மர்மநபர்களும், நடுரோட்டில் வைத்து ஸ்கூட்டரில் வந்த இளம்பெண்ணின் உடலை தொட்டு சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டு அலறினார். உடனே அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்தனர். இதனால்அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் மக்களை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பானசவாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பெங்களூருவில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article