திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

4 hours ago 2

திருநெல்வேலி மாவட்டம், வடக்கு வள்ளியூர், நடுத்தெருவைச் சேர்ந்த சாமிசெல்வன் மகன் அரவிந்த் (வயது 27), போக்சோ வழக்கில் தொடர்புடையவர் ஆவார். இவர் மீது சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் (18.5.2025) அரவிந்த், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Read Entire Article