
கோலாலம்பூர்,
பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இந்த தொடர் வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இன்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் ஹூவாங் யு காய் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 9-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஸ்ரீகாந்த், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 21-12, 21-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.