ஷோபனா, மோகன்லால் நடிக்கும் 'எல் 360' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

2 months ago 14

 திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'நெரு' திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இதற்கடுத்து வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இதனையடுத்து மோகன்லால் தனது 360-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை, இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல்360' என்று பெயரிடப்பட்டுள்ளது. ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

இப்படத்தில் மோகன்லாலுடன் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1985-ல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து 'அவிடத்தி போலே இவிடேயும்' என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004-ல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள்.

தற்போது மீண்டும் 20 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில், படப்பிடிப்பு வீடியோவை 'எல் 360' படக்குழு வெளியிட்டிருந்தநிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருக்கிறார். மேலும், வரும் 8-ம் தேதி அடுத்த அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, அன்று இப்படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article