மதுரை, பிப். 21: ஷாப்பிங் மால் ஆக மாற்றப்பட உள்ளதால், மதுரையில் உள்ள அம்பிகா தியேட்டர் விரைவில் இடிக்கப்பட உள்ளது. மதுரை மாநகர மக்களின் பொழுதுபோக்கு வரலாற்றில், அம்பிகா திரையரங்கத்தின் பங்கு முக்கியமானது. இத்திரையரங்கில் பல தொழில்நுட்பங்கள் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், டிடிஎஸ் சவுண்ட் எபெக்ட்டுடன் படங்கள் திரையிடப்பட்டன. பாட்ஷா, வாலி, கில்லி, கஜினி, ஆளவந்தான், தூள், ரன், அலைபாயுதே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இந்த தியேட்டரில் நூறு நாட்களுக்கும் மேலாக ஓடியது.
இந்நிலையில் தியேட்டர் தற்போது இடிக்கப்பட உள்ளது. இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் ஆனந்த் கூறும்போது, ‘‘திரையரங்க வளாகம் முழுவதும் இடித்து பெரிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பிப்.27 வரை காட்சிகள் திரையிடப்படும். பின்னர் இடிக்கப்பட்டு 18 மாதங்களில் 5 மேல் தளங்கள், 2 கீழ்தளத்துடன் ஷாப்பிங் மால் கட்டப்படும்’’ என்றார்.
The post ஷாப்பிங் மால் ஆக உருமாறுகிறது மதுரையில் தியேட்டர் விரைவில் இடிப்பு: பிப்.27 வரை செயல்படும் appeared first on Dinakaran.