மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை வைத்து மத மோதலை உருவாக்கும் செயல்களை மக்கள் முறியடிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘மதுரையில் மத நல்லிணக்க வழக்கறிஞர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் தீர்ப்புகள் சொல்வதென்ன? வரலாற்று உண்மை என்ன?’ என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினர்.