ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சினெர்

3 months ago 20

ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் 33-ம் நிலை வீரரான தாமஸ் மசாக்கை (செக்குடியரசு) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் சினெர் இந்த ஆண்டு இறுதிவரை தரவரிசையில் முதலிடத்தில் நீடிப்பார். இத்தகைய பெருமையை பெறும் முதல் இத்தாலி வீரர் சினெர் ஆவார்.

மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்டில் டெய்லர் பிரிட்சை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

இதன்படி இன்று நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை 7-6(4), 6-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இத்தாலி வீரர் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார்.

வெற்றிக்குப்பின்னர் பேசிய ஜானிக் சினெர், "இது மிகவும் கடினமான போட்டி, வெளிப்படையாக, நோவாக்கிற்கு எதிராக விளையாடுவது எங்களிடம் உள்ள கடினமான சவால்களில் ஒன்றாகும். நான் நிலைமையை எவ்வாறு கையாண்டேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் முதல் செட்டில் சிறப்பாக ஆடினார். அவரை நிறுத்த என்னால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஒரு நல்ல டை-பிரேக் விளையாடினேன், இது இரண்டாவது செட்டில் நன்றாகத் தொடங்க நம்பிக்கையை அளித்தது" என்று அவர் கூறினார்.

Read Entire Article