மகளின் காதலுக்கு எதிர்ப்பு: அரசு அதிகாரி, மனைவியுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

5 hours ago 2

நாமக்கல்,

நாமக்கல்லை சேர்ந்தவர் சுப்பிரமணி. திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய சுப்பிரமணி 6 மாதங்களுக்கு முன்புதான் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றிருந்தார்.

இந்நிலையில் தம்பதிகள் இருவரும் நேற்று அதிகாலை வகுரம்பட்டி பகுதியில் ரெயில் முன்பு விழுந்து உயிரை மாய்த்து கொண்டனர். இருவரது உடல்களை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் அவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், மகளின் காதலுக்கு சுப்பிரமணியும், பிரமிளாவும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலை கைவிட மறுத்த அவர் அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த கணவன்- மனைவி இருவரும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article