வியான் முல்டர் இரட்டை சதம்... முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 465/4

4 hours ago 3

புலவாயோ,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக டோனி ஜி ஜோர்சி மற்றும் லெசெகோ செனோக்வானே களம் புகுந்தனர். இதில் லெசெகோ செனோக்வானே 3 ரன்னிலும், டோனி ஜி ஜோர்சி 10 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் வியான் முல்டர் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் டேவிட் பெடிங்ஹாம் அரைசதம் அடித்த நிலையில் 82 ரன்னிலும், அடுத்து வந்த பிரிட்டோரியஸ் 78 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து டெவால்டு ப்ரெவிஸ் களம் புகுந்தார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முல்டர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 88 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 465 ரன்கள் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 264 ரன்னுடனும், ப்ரெவிஸ் 15 ரன்னுடம் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Read Entire Article