ஷமர் ஜோசப் அசத்தல் பந்துவீச்சு... 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243 ரன்களில் ஆல் அவுட்

4 hours ago 4

செயின்ட் ஜார்ஜ்,

ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்னில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 73.2 ஓவர்களில் 253 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரன்டன் கிங் 75 ரன்னும், ஜான் கேம்ப்பெல் 40 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இருப்பினும் ஸ்டீவ் சுமித் (71 ரன்கள்), கேமரூன் கிரீன் (52 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கவுரமான நிலையை எட்டியது.

2-வது இன்னிங்சில் 71.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 277 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. அபாரமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜெய்டன் சீல்ஸ், அல்சாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கி உள்ளது. 

Read Entire Article