திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே மாதத்தில் 2 கருட சேவைகள்

5 hours ago 4

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10-ந்தேதி குருபூர்ணிமா, 29-ந்தேதி கருட பஞ்சமி உற்சவங்கள் நடக்கின்றன. எனவே 2 நாட்களில் இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை கருட சேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடக்கிறது.

அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article