ஷபீக் - ஷான் மசூத் அபார சதம்; முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 328/4

1 month ago 8

முல்தான்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சைல் அயூப் 4 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து கேப்டன் ஷான் மசூத் களம் புகுந்தார். ஷபீக் - ஷான் மசூத் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இந்த இணையை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் ஷபீக் 102 ரன்னிலும், ஷான் மசூத் 151 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து பாபர் அசாம் - சவுத் ஷகீல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். இதில் பாபர் அசாம் 71 பந்துகளில் 30 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

தொடர்ந்து நசீம் ஷா களம் இறங்கினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 86 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 328 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Read Entire Article