வைரலாகும் 'வேட்டையன்' சப்வே சண்டைக்காட்சி மேக்கிங் வீடியோ!

3 months ago 16

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இயக்குநர் த. செ. ஞானவேல் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் பயணத்தில் பயணித்த அனைவருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் வகையில், படக்குழுவினர் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கியது.

இந்த நிலையில், வேட்டையன் படத்தில் இடம்பெற்ற சுரங்க நடைபாதை சண்டைக்காட்சியின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரஜினிகாந்துக்கு சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆக்சன் சொல்லித்தருவது, அதை ஒளிப்பதிவாளர் படமாக்குவது. இயக்குனர் ஞானவேல் காட்சி குறித்து விளக்குவது என அந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Thalaivar in action! Step into the BTS of the breathtaking subway fight scene from VETTAIYAN ️#VettaiyanRunningSuccessfully ️ in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #FahadhFaasilpic.twitter.com/ePuUJyJOlM

— Lyca Productions (@LycaProductions) October 23, 2024
Read Entire Article