
மும்பை,
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்று வரும் 56வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் விளையாடி வந்தது. 14 ஓவர்கள் முடிவில் குஜராத் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதிய நிலவரப்படி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குஜராத் 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது. மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படும் பட்சத்தில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குஜராத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.