
மும்பை,
அக்சய் குமார் , ஜியா கான், அர்ஜுன் ராம்பால், ஜாக்குலின் பெர்னாண்டஸ், லாரா தத்தா மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் நடிப்பில் கடந்த 2010-ல் 'ஹவுஸ்புல்' தொடரின் முதல்பாகம் வெளியானது.
இந்த தொடரில் இதுவரை 4 பாகங்கள் வெளியாகி உள்ளன. இந்த 4 பாகங்களிலும் அக்சய் குமார் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளனர். ஒவ்வொன்றும் முந்தைய பாகத்தின் கதையுடன் தொடர்பில்லாத ஒரு புதிய கதையாகவே இருக்கும்.
தற்போது 'ஹவுஸ்புல்' தொடரின் 5-ம் பாகம் உருவாகி உள்ளது. 5-வது பாகத்தை எட்டிய முதல் இந்திபடம் என்ற பெருமை 'ஹவுஸ்புல்' படத்தையே சேரும். இதில், அக்சய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பாஜ்வா, நர்கிஸ் பக்ரி, பர்தீன் கான்,சித்ராங்கதா சிங் , சவுந்தர்யா சர்மா, ஜாக்கி ஷெராப், சஞ்சய் தத், நானா படேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் 6-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளநிலையில், டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.