வைடு பால் கொடுக்கும் விதியில் விரைவில் மாற்றம்: ஷான் பொல்லாக் தகவல்

2 hours ago 2

துபாய்: தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான ஷான் பொல்லாக் பவுலிங் ஜாம்பவான் ஆவார். அவர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 829 சர்வதேச விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 393 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். அவர் தற்போது ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார். அந்த கமிட்டி தான் கிரிக்கெட்டில் முக்கிய விதிமாற்றங்களை செய்யும். அந்த வகையில் ஷான் பொல்லாக் ஐசிசி விதிகளில் செய்யப்பட உள்ள முக்கிய மாற்றம் ஒன்று பற்றி பேசி இருக்கிறார். சமீப காலமாக டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் அதிக வைடு பந்துகளை வீசி வருகின்றனர்.

டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர் பந்து வீச ஓடிவரும்போது பேட்ஸ்மேன் தனது காலை நகர்த்தி வைக்கிறார். அப்படி செய்யும்போது பந்துவீச்சாளர் ஓடிவந்து கொண்டிருக்கும்போதே தான் பந்துவீச வேண்டிய இடம் எது என்ற குழப்பத்திற்கு ஆளாகி பந்தை வேறு திசையில் வீசுகிறார். அது பலமுறை வைடு ஆக மாறிவிடுகிறது. இது பவுலர்களுக்கு பாதகமான ஒன்று. இது சரியல்ல. பந்துச்சாளர்களுக்கு ஆதரவாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதால் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் வைடு விதி குறித்து மாற்றம் ஒன்றை செய்ய உள்ளதாக ஷான் பொல்லாக் கூறி இருக்கிறார்.

இனி பந்துவீச்சாளர் ஓடி வரும் போது பேட்ஸ்மேன் தனது இடத்தை விட்டு நகர்ந்தால், இந்த புதிய வைடு விதியின்படி தான் அம்பயர் முடிவு எடுப்பார் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார் பொல்லாக். ஆனால், அந்த விதி என்ன என்பது பற்றி ஷான் பொல்லாக் விளக்கம் அளிக்கவில்லை. பொதுவாக ஏப்ரல் 1 முதல் ஐசிசி புதிய விதிகளை அமல்படுத்தும். அதுபோல 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த விதி அமலுக்கு வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த விதியால் வேகப் பந்துவீச்சாளர்கள் சற்று நிம்மதி அடையலாம்.

The post வைடு பால் கொடுக்கும் விதியில் விரைவில் மாற்றம்: ஷான் பொல்லாக் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article