நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் அறிவிப்பு

4 hours ago 3

மும்பை: 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின், செய்தியாளர் சந்திப்பில் 18வது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை உறுதிப்படுத்தினார்.

மேலும் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் பிசிசிஐ-ன் புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா;

“ஐபிஎல் 2025 சீசன் வருகின்ற மார்ச் 23ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டி எந்த அணிகளுக்கு இடையே நடைபெறும் என்பது தற்போது முடிவு செய்யப்படவில்லை. அதே நேரத்தில், மகளிர் பிரிமியர் லீக் போட்டி நடைபெறும் இடங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளது, விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

கடந்த ஐபிஎல் சீசன் கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி தொடங்கியது. அதன் முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதின. மே 26-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.இறுதிப் போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியனானது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளதை அடுத்து ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

The post நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article