வைஜெயந்திமாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஐடிஎம் பல்கலைக்கழகம் சென்னையில் வழங்கியது

4 months ago 15

சென்னை: பழம்பெரும் திரைப்பட நடிகையும் பரதக் கலைஞருமான வைஜெயந்திமாலா பாலிக்கு, ஐடிஎம் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை சென்னையில் வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரத்தில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனம் ஐடிஎம் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 23-ம்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

வைஜெயந்திமாலா பாலி, மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், மத்தியப் பிரதேசகல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர், ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ருச்சி சிங், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா உள்ளிட்ட இந்தியாவின் கலை, வரலாறு, கல்வி, ஆட்சி நிர்வாகம், விளையாட்டு ஆகிய துறைகளில் சாதனை படைத்துள்ள 13 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

Read Entire Article