மதுரை: வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கில் தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு ஆய்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வைகை ஆற்றில் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.
The post வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆய்வு நடத்துக: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.