வைகை, பல்லவன் உட்பட 20 விரைவு ரயில் சேவையில் மாற்றம்: சென்னை கடற்கரை - எழும்பூர் பாதையில் ஆய்வு

2 hours ago 1

சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதையில் ஆய்வு நடைபெற உள்ள நிலையில், வைகை, பல்லவன், செந்தூர் விரைவு ரயில் உள்பட 20 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் விவரம்: புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16116), செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. திருவண்ணாமலை - தாம்பரத்துக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் (66034), கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. காரைக்குடி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் பல்லவன் விரைவு ரயில் (12606), தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

Read Entire Article