உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழை ஆட்சிமொழி ஆக்குவதை எது தடுக்கிறது? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

3 hours ago 2

தமிழைப் போலவே மற்றவர் தாய்மொழியையும் மதிக்கிறோம். ரூபாய் நோட்டில் உள்ள தாய்மொழியான தமிழை ஆட்சி மொழியாக்குவதை எது தடுக்கிறது? என்று மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்பட்ட இந்திய ஒன்றியத்தில், ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி மீது மற்றொரு மொழியை கட்டாயமாகத் திணிக்கும்போது அந்த மாநில மக்கள் பேசுகின்ற மொழியும் அதன் பண்பாடும் சிதைக்கப்படும். இந்தியும் சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால் இந்திய மொழிகள் பலவும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன.

Read Entire Article