சென்னை,
தைப்பூசம் மற்றும் இருமுடி விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636), இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் பிப்ரவரி 11-ந்தேதி வரையில் தற்காலிகமாக மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இந்த ரெயில் நேற்றும் (19-ந்தேதி) மேல்மருவத்தூரில் 2 நிமிடம் நின்று சென்றது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.