'வேளாண்மைத்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது' - தமிழக அரசு

2 months ago 13

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரும்பு விலை டன் ரூ.2,750 என்பது ரூ.3,134.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ரூ.611 கோடியில் கலைஞர் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் ரூ.335 கோடி மானியத்தில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும், ரூ.56 கோடியில் முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Read Entire Article