வேளாண்மை பட்ஜெட் நிறைவு: 1 மணி நேரம் 42 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

5 hours ago 3

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சரியாக, இன்று காலை 9.30 மணிக்கு இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது. 9.31 மணிக்கு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கினார். இந்த நிலையில் 11.13 மணிக்கு அவர் உரையை நிறைவு செய்தார். 1 மணி நேரம் 42 நிமிடங்களுக்கு வேளாண்மை பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது.

நேற்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு 2 மணி நேரம் 38 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article