அரியலூர், டிச. 21: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் வேளாண் விரிவாக்கம் மையத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் வேளாண் வணிக தூதுவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குநர் கோவிந்தராசு தலைமை வகித்து, வேளாண் உள்கட்டமைப்பு நிதி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தைப் பயன்கள் குறித்து விளக்கினார்.
வேளாண்அலுவலர் கார்த்திக் கலந்து கொண்டு, மக்காச்சோளம், நிலக்கடலை சந்தைபடுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்தும், ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலர் குழந்தைவேல், ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் உள்ள உலர்களங்கள், பொருளீட்டு கடன், குளிர்பதன கிடங்கு, உழவர் நலத் திட்டம் குறித்தும் பேசினர்.
மேலும் அவர்கள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். கூட்டத்தில் திருமானூர் மற்றும்அரியலூர் வட்டாரத்தைச் சேர்ந்த 32 வணிக தூதுவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் வணிக உதவிஅலுவலர் அருந்ததி செய்திருந்தார்.
The post வேளாண் வணிக தூதுவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.