வேளாண் பல்கலை.யில் மலர்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

4 months ago 29

 

கோவை, அக்.7: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மலர்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி வரும் 9-ம் தேதி நடக்கிறது.  இதில், பொதுமக்கள், அறிவியல் மாணவர்கள், புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் கலந்துகொள்ளலாம். பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது.

இதில், பல வகைப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட மலர் பொருட்களான பூமாலை, ஜடை பட்டி, நிறமேற்றப்பட்ட மலர்கள், மலர்களை கொண்டு செய்யப்படும் கைவினை பொருட்கள் போன்றவை குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கூடுதல் தகவலுக்கு மலரியல் துறை பேராசிரியர் கார்த்திகேயனை 99654-35081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேளாண் பல்கலை.யில் மலர்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article