நாகப்பட்டினம், மார்ச் 25: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி பின்புறம் புதியதாக கட்டப்பட்ட தபால் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. கட்டிடத்தின் கல்வெட்டினை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா திறந்து வைத்தார். தபால் நிலையம் அலுவலகத்தை நாகப்பட்டினம் மாவட்ட தபால் துறை கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
கீழையூர் ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சி திமுக செயலாளர் மரிய சார்லஸ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகேசன், நிக்சன், ஜெனட்அலெக்ஸ் சிசிலியா, சுமதி, சத்யா, தையல்நாயகி, ரிஸ்வானா, சசிரேகா, கேத்ரின்மேரி, வின்சியா மற்றும் கழக நிர்வாகிகள் சார்லஸ், டேனியல் சத்யா, மாரிமுத்து, கந்தையன், ஸ்டாலின், சாமிநாதன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், தபால் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post வேளாங்கண்ணியில் புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா appeared first on Dinakaran.