வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு: மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம் அமல்

11 hours ago 1

சென்னை: வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது என மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் புதிய திட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். அதில்,

* சென்னையில் நீர்வளத்துறை வசமிருந்த வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

* 6.5 கி.மீ நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் இருக்கும் குறுகிய பாலங்களால் 1700 கன அடி நீர் செல்ல வேண்டிய இடத்தில் 800 கன அடி மட்டுமே செல்வதால், 12 குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்ட நடவடிக்கை

*வடபழனி 100 அடி சாலையில் ஒவ்வொரு முறையும் மழையால் தண்ணீர் தேங்குவதற்கு, கால்வாயில் அதிக தண்ணீர் செல்ல முடியாததே காரணமாக இருப்பதால் குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்டப்பட உள்ளன

* வரும் 2025 பிப்ரவரி மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும். இதனால் சுமார் 25 லட்சம் மக்கள், மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுக்காக்கப்படுவார்கள் என மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) தகவல்

* இதேபோல, வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு தீர்வாக 2.78 கி.மீ தூரத்திற்கு வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஓடையில் தற்போது செல்லும் தண்ணீரை விட 25% தண்ணீர் கூடுதலாக செல்ல வழிவகை செய்யப்படும்.

 

The post வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு: மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம் அமல் appeared first on Dinakaran.

Read Entire Article