விருதுநகர், பிப்.6: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாகும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் பெரும்பாலும் நேரடி நியமனம் மூலமாகவே நடைபெறுகின்றன. அந்தந்த கல்லூரிகளில் காலியாகும் பணியிடங்களுக்கு ஏற்ப நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் உதவி பேராசியர் பணியிடங்கள் நியமனத்திற்கு ரூபாய் 40 லட்சத்திற்கும் அதிகமான லஞ்சத்தொகைகள் பெறப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. எனவே, போட்டித் தேர்வுகள் மூலம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில், சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிட நியமனம் பெரும் மர்மமாகவே உள்ளது. இதனால் தகுதியானவர்களுக்கு பணிகள் கிடைக்காமல் போகிறது. எனவே, உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post போட்டி தேர்வுகளில் நிரப்ப கோரிக்கை appeared first on Dinakaran.