சென்னை,
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
திராவிட மாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம்!
இந்திய ஒன்றியத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் என்றும் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் நீட்சியும், நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியும் இப்போது நல்ல விளைச்சலை தந்துக் கொண்டிருக்கின்றன.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியால் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக 2030ஆம் ஆண்டுக்குள் உயர்த்திடுவதற்கான பணிகள் நம் திராவிட மாடல் அரசால் தொடரும், உயரும்."
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் என்றும் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.