விருதுநகர், ஏப்.9: சூலக்கரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 11ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்ட தகவல்: சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏப்.11 காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில், அடையாறு ஆனந்தபவன், ஆர்.கே.மோட்டார், பேடிஎம், அண்ணாமலை டயோட்டா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் படிப்பு ஆகிய கல்வித்தகுதி உடையோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலைநாடுநர்கள் ஏப்.11 வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் முன்பாக இணையதளத்தில் தங்களது சுய விவரங்கள் பதிவு செய்து, அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பாதிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
The post வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 11ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.