வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த ஆர்.கே செல்வமணி

4 hours ago 4

சென்னை,

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை வடபழநியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம். 55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.புதியதாக சிலர் ஒரு திரைப்படம் தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்குகிறார்கள். தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளிகள் சிலர் அழிப்பதற்காக இந்த தொழிலாளர் அமைப்பை உருவாக்குகிறார்கள். தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளிகள் சிலர் அழிக்க முயற்சிக்கும் கொடுமைக்கு எதிராக வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. வரும் 14ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த பெப்சி முடிவு செய்துள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்சன் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது.

ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article