*இன்று பள்ளிகொண்டாவில் நடக்கிறது
வேலூர் : வேலூர் பத்திரப்பதிவு மண்டல அலுவலக கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செய்யாறு ஆகிய பதிவு மாவட்டங்களில் 45 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இங்கு இந்திய முத்திரை சட்டம் 1899 பிரிவு 47 ஏ(1),(3)ன்படி நிலுவையில் உள்ள பத்திரங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, வேலூர் பதிவு மண்டலத்தில் மொத்தம் 2205 ஆவணங்களுக்கு ரூ.14.49 கோடி நிலுவை தொகை செலுத்த வேண்டிய நிலையில் இதற்கான சிறப்பு முகாம் வேலூர், கணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் உட்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம் வேலூர் ஒருங்கிணைந்த பதிவு அலுவலகத்தில் நேற்று நடந்தது.
முகாமிற்கு பதிவுத்துறை டிஐஜி அருள்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட பதிவாளர் ராஜா, தணித்துறை ஆட்சியர் (முத்திரைகட்டணம்) சீதா, தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் உமாபதி வரவேற்றார்.இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு நிலுவை தொகையை செலுத்தி தங்களது பத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சார்பதிவாளர் ஜெயகுமார், பிரகாஷ் பதிவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நேற்று நடந்த சிறப்பு முகாமில் 13 பத்திரங்களுக்கு ரூ.12.40 லட்சத்துக்கான பணத்தை செலுத்தி, ஆவணங்களை பொதுமக்கள் பெற்று சென்றனர்.
தொடர்ந்து, இன்று பள்ளிகொண்டாவிலும், வரும் 3ம் தேதி காட்பாடியிலும், 4ம் தேதி குடியாத்தத்திலும், 5ம் தேதி பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர்.
கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
தமிழ்நாட்டில் உள்ள 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமை இயங்கி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்று கிழமைகளில் சார் பதிவாளர் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலூர் பதிவு ஒருங்கிணைந்த மண்டலத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலுவை பத்திரங்கள் பெற சிறப்பு முகாமில் ₹12.40 லட்சம் வருவாய் appeared first on Dinakaran.