வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் முல்லை கிலோ ரூ.120க்கு விற்பனை

3 hours ago 2

*வர்த்தகம் மந்தம் என வியாபாரிகள் தகவல்

வேலூர் : வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் முல்லை கிலோ ரூ.120க்கு விற்பனையானது. வியாபாரம் மந்தம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டிற்கு மொத்தம், சில்லரை என 100க்கும் மேற்பட்ட பூ கடைகள் உள்ளன.

பூ மார்க்கெட்டிற்கு வேலூர், அணைக்கட்டு, ஓசூர், திருவண்ணாமலை, பெங்களூரு, வி.கோட்டா, குண்டூர், குப்பம், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லி, முல்லை, கனகாம்பரம், சாமந்தி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை முல்லை ஒரு கிலோ ரூ.250, சாமந்தி ரூ.250, மல்லி ரூ.500, கனகாம்பரம் ரூ.800க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சித்ரா பவுர்ணமி மற்றும் வேலூர் புஷ்ப பல்லக்கு என்பதால் நேற்று நேதாஜி மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரித்தது. அதேவேளையில் பூக்களின் விலையும் கணிசமாக குறைந்தது. அதன்படி முல்லை கிலோ ரூ.120, சாமந்தி ரூ.150-ரூ.200, மல்லி ரூ.300 என விற்கப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்த்தில் முக்கிய திருவிழாக்கள் வரும் 14ம் தேதி வேலங்காடு பொற்கொடியம்மன் திருவிழா, வரும் 15ம்தேதி குடியாத்தம் சிரசு திருவிழா நடக்கிறது. அதன்பின்னர் வைகாசி மாத திருவிழாக்கள் களைகட்டும்.

இதனால் பூக்களின் விலை அடுத்த ஓரிரு நாட்களில் அதிகரிக்கும். இன்று (நேற்று) ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூ வியாபாரம் குறைந்திருந்தது. நாளை(இன்று) முதல் கூட்டம் அதிகரிக்கும். பூக்களின் வரத்து அதிகரித்தால், விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

The post வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் முல்லை கிலோ ரூ.120க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article