சென்னை: ரயில் மதத் (Rail madad)புகார் மூலம் ரயில் பயணி தவறவிட்ட ஆறு லட்சம் மதிப்புள்ள ஏழு சவரன் தங்க நகை மற்றும் உடைமைகளை எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
இன்று (12.05.2025) காலை சென்னை ரயில்வே கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையாளர் பி.ராமகிருஷ்ணன் மற்றும் உதவி கோட்ட ஆணையாளர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கே.பி. செபாஸ்டியன் தலைமையில் பொதிகை அதிவிரைவு வண்டியில் விழுப்புரத்தில் இருந்து சென்னை எக்மோர் வரை பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள்1) ராஜேந்திர குணாவத் மனோஜ் குமார் 3) சுகன்யா 3) வித்யா ஆகியோர் எக்மோர் ரயில் நிலையத்தில் வண்டி வந்த பிறகு எம் டி ராக்கை(EmptyRack) சோதனை செய்தபோது,ஏசி கோச்சில் யாரும் உரிமை கோராத ஒரு பை இருப்பதை கண்டனர். உடனடியாக அதை கைப்பற்றி ஸ்டேஷன் மாஸ்டர் முன்னிலையில் சோதனை செய்தபோது 6 லட்சம் மதிப்புள்ள ஏழு சவரன் நகை மற்றும் பொருள்கள் இருந்தனர்.
சற்று நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோல் ரூமில் இருந்து ரயில் பயணி பையை தாவர விட்டதாக ரயில் மதத்து(Rail mada)புகார் பெறப்பட்டது.
பின்னர் புகார் அளித்தவரிடம் on duty officer Santosh.D/ SIPF தொடர்பு கொண்டு பேசியபோது அவர் தென்காசியில் இருந்து தாம்பரத்திற்கு ரயிலின் பயணம் செய்ததாகவும், பையை மறந்து தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் இறங்கி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அதில் நகை பணம் மற்றும் பொருட்கள் இருந்ததாக தெரிவித்தார்.
பின்பு அவரை எக்மோர் அலுவலகத்திற்கு வரவைத்து அவருடைய உடைமைகள் மற்றும் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு ரயில்வே காவல்துறை முன்னிலையில் ரயில்வே பாதுகாப்பு படையால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு ரயில் பயணி துரிதமாக செயல்பட்டு பையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
The post ரயிலில் தவறவிட்ட 6 லட்சம் மதிப்புள்ள நகையை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு appeared first on Dinakaran.