வேலூர் தொரப்பாடியில் புதர்மண்டி பாழடைந்து கிடக்கும் மாநகராட்சி பூங்கா: சமூக விரோதிகள் பிடியில் இருந்து மீட்க கோரிக்கை

2 months ago 10

வேலூர்: வேலூர் தொரப்பாடியில் புதர்மண்டி பாழடைந்து கிடக்கும் மாநகராட்சி பூங்காவை சமூகவிரோதிகள் பிடியில் இருந்து மீட்டெடுத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாநகராட்சி தொரப்பாடி ஜீவா நகரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே அது சமூக விரோதிகளின் பிடியில் சிக்கிக்கொண்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. இதையடுத்து ரூ41 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பூங்கா மேம்படுத்தப்பட்டு ஊஞ்சல், சறுக்கு மரம், பேலன்ஸிங் என குழந்தைகளை கவரும் அம்சங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

தற்போது சமூக விரோதிகளின் பிடியில் பூங்கா சிக்கியதால், அங்கு பொதுமக்கள் செல்லவே அச்சமடைந்து வருகின்றனர். பூங்காவில் இருந்த ஊஞ்சல் உட்பட குழந்தைகளை கவரும் அம்சங்கள், பூங்கா மின்விளக்கு கம்பங்கள் அனைத்தும் களவு போனது. பூங்காவும் புதர்கள் மண்டி முழுமையாக கஞ்சா, போதை ஆசாமிகளின் பிடியில் சிக்கியுள்ளது. எனவே, இந்த பூங்காவை சமூக விரோதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து சீரமைப்பதுடன், வேலூரின் ஒரு பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக வந்து பொழுது போக்கி செல்லும் வகையில் சிறப்பு அம்சங்களை சேர்த்து திறப்பதுடன், மீண்டும் சமூக விரோதிகள் நுழையாத வகையில் உரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் தொரப்பாடியில் புதர்மண்டி பாழடைந்து கிடக்கும் மாநகராட்சி பூங்கா: சமூக விரோதிகள் பிடியில் இருந்து மீட்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article