டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் ராகுல் காந்தியுடன் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்தி ராகுல்காந்தி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; ‘‘அப்பா உங்களது நினைவுகள் ஒவ்வொரு செயலிலும் என்னை வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறாத கனவுகளை நனவாக்கி நிச்சயமாக நிறைவேற்றியே தீருவேன்’’எனக் குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; ‘‘இந்தியாவின் சிறந்த மகனான ராஜீவ் காந்தி பல லட்சக்கணக்கான இந்தியர்களிடையே நம்பிக்கையை தூண்டினார். அவரது தொலைநோக்கு மற்றும் துணிச்சலான தலையீடுகள் 21 ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இந்தியாவை தயார் படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன.
வாக்களிக்கும் வயதை 18 ஆகக் குறைத்தல், பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை வலுப்படுத்துதல், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை முன்னெடுத்துச் செல்வது, கணினிமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்துதல், நிலையான அமைதி ஒப்பந்தங்களைப் பெறுதல், உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தைத் தொடங்குதல் மற்றும் உள்ளடக்கிய கற்றலை மையமாகக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தார்’’. முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் தியாக நாளில் அவருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்: ராகுல்காந்தி, கார்கே மரியாதை..!! appeared first on Dinakaran.