25 அல்ல.. 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்… சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு!!

6 hours ago 3

சென்னை : 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தும் போக்குவரத்து போலீசார். 25 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், போக்குவரத்து காவல்துறையினர் கும்பலாக நின்று கொண்டு தேவையில்லாமல் அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட உள்ளது. அவை பின்வருமாறு..

*அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
*இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
*ஒன்வேயில் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
*குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
*இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.

The post 25 அல்ல.. 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்… சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article