வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசி மகா திருவிழா: பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சி

4 hours ago 2

வேதாரண்யம்,பிப்.12: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசி மகா திருவிழா பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 20-ம் தேதி கணபதி பூஜை மற்றும் 23-ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 20-ம் தேதி வரை 30 நாட்கள் நடக்கவுள்ள மாசிமக உற்சவத்தையொட்டி பட்டோலை வாசித்தல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடந்தது.

இதையொட்டி மாசி மக உற்சவ நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய பட்டோலை வாசித்தல் கணபதி பூஜையுடன் நடந்த பின்னர் சாமி சன்னதி முன்பு கோயில் ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், செயல் அலுவலர் ஜெயகுமார், அரசு கல்லூரி துணை முதல்வர் குமரேசமூர்த்தி உட்பட உபயதார்கள் முன்னிலையில் அலுவல பொறுப்பாளர் ராமன் திருவிழாக்கள் குறித்த பட்டோலை விவரம் படித்தார். பின்னர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பூஜைகளுடன் வீதியுலா சென்று நாகை சாலையில் உள்ள வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

The post வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசி மகா திருவிழா: பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article