வேதாரண்யம் அருகே இறந்தவர் உடலை வாய்க்காலில் சுமந்து சென்ற உறவினர்கள்: சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை

3 hours ago 2

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வடமழை ரஸ்தா பகுதிக்கான சுடுகாடு, ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடலை வஉசி நகர் இணைப்பு வரை சாலை வழியாகவும், அதன்பிறகு 500 மீட்டர் தொலைவுக்கு வடிகால் வாய்க்காலில் இறங்கி உறவினர்கள் தூக்கி சென்று இறுதி சடங்கு நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் வஉசி நகர் வடிகால் வாய்க்காலில் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது.

இந்தநிலையில் வடமழை ராஸ்தா பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(80) உடல்நல குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து இறுதி ஊர்வலத்துக்காக சுடுகாட்டுக்கு பொதுமக்கள் தூக்கி சென்றனர். வ.உ.சி நகர் இணைப்பு சாலை வரை சாலை வழியாக சென்றனர். சுடுகாட்டுக்கு செல்லும் வடிகால் வாய்க்காலில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. சுடுகாட்டுக்கு செல்ல வேறு வழி இல்லாததால் தண்ணீரில் இறங்கி இறந்தவரின் உடலை உறவினர்கள் சுமந்து சென்று தகனம் செய்தனர். எனவே வடமழை ராஸ்தா சுடுகாட்டுக்கு சாலை வசதி அமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேதாரண்யம் அருகே இறந்தவர் உடலை வாய்க்காலில் சுமந்து சென்ற உறவினர்கள்: சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article