வேதாரண்யம்,செப்.29: வேதாரண்யத்தில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நடைபெறும் இடத்தை நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு அழகு கண்காணிப்புப் பொறியாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் செட்டியார்குத்தகை ஹரிசன காலனி சாலை சந்திப்பு விரிவாக்க பணிக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மதிப்பீடு தாயரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், ஆய்வு செய்து, சந்திப்பு சாலையில், முன்னெச்சரிக்கை பலகை வைத்தல் போன்ற ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
ஆய்வின்போது கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி, உதவி கோட்ட பொறியாளர் பிரமிளா, உதவி பொறியாளர் கார்த்திகா, வேதாரண்யம் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
நாகப்பட்டினம்,செப்.29: கால்நடை சார்ந்த தொழில்கள் தொடங்க வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தில் பயன் பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த உற்பத்தி அமைப்புகள், தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தேசிய கால்நடை இயக்கம். இந்த திட்டத்தின் மூலம் தொழில்முனைவோர் வளர்ச்சியடைவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது இறைச்சி, முட்டை, தீவனப்புல் உற்பத்தி மற்றும் கம்பளி உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி அதிகமாகும் பட்சத்தில் உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு, ஏற்றுமதி செய்து வருமானத்தை உயர்த்த வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஆடுகள், கோழிகள், பன்றிகள் மற்றும் தீவன உற்பத்தித் துறைகளில் இருப்பவர்கள் பயன்பெறலாம். தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், முன்னாள் கூட்டுறவு அமைப்புகள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள் மற்றும் பிரிவு 8 நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின் மூலம்; தகுதியுடையவர்களுக்கு கிராமப்புற கோழி பண்ணைகள், செம்மறி மற்றும் வெள்ளாட்டு பண்ணை, பன்றி பண்ணை, தீவன மதிப்புக் கூட்டல் அலகு மற்றும் சேமிப்பு அலகு ஆகியவற்றை நிறுவுவதற்கு 50 சதவீத மூலதன மானியமாக வழங்கப்படுகிறது.
கோழி பண்ணை அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம், செம்மறி மற்றும் வெள்ளாட்டு பண்ணை அமைப்பதற்கு ரூ.50 லட்சம், பன்றி வளர்ப்பதற்கு ரூ.30 லட்சம் மற்றும் தீவன தொழிலுக்கு ரூ.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. பண்ணை அமைக்கும் திட்ட செலவில் மீதமுள்ள தொகையை விண்ணப்பதாரர்கள் வங்கிக் கடன்கள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து பெறலாம். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது சம தவணையாக வழங்கப்படும். முதல் தவணை திட்டத்தின் தொடக்கத்திலும், இரண்டாவது தவணை திட்டம் முடிந்த பின்னரும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்முனைவோர், தனியார் மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் முறையான திட்ட மதிப்பீட்டறிக்கையுடன் https://dahd.nic.in/Schemes என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, திட்டம் தொடர்பான ஆவணங்களை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறவும் மேலும் இத்திட்ட விவரங்களுக்கு நாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post வேதாரண்யத்தில் சாலை விரிவாக்கப்பணி appeared first on Dinakaran.