வேணாநல்லூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

2 months ago 10

தா.பழூர், டிச.3: வேணாநல்லூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை சார்பில் கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் 2024-25 மூலம் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இது ஆட்டுக்கொல்லி நோய் ஒழித்தல், தடுப்பூசி திட்டம் 2024-25 மூலம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் கிராமங்கள் தோறும் தற்போது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விவசாயிகளின் வீடுகள் உள்ள பகுதிக்கு சென்று முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தா.பழூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வேணாநல்லூர் இருகையூர் கிராமங்களில் அரியலூர் மண்டல இணை இயக்குநர் மரு பாரிவேந்தர் மற்றும் உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குனர் மருபெ.ரமேஷ் வழிகாட்டுதலின்படி வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இருகையூர் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் உதவி இயக்குனர் மருத்துவர் ரமேஷ் உடையார்பாளையம் முன்னிலையில் கால்நடை மருத்துவர் பெரியசாமி, கால்நடை ஆய்வாளர் சுமதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

இந்த முகாமில் வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வளர்க்கக்கூடிய வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு என சுமார் 1500க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மழைக்காலங்களில் ஆடுகள், மாடுகளுக்கு ஏற்படக்கூடிய நோய் குறித்தும் இதன் பாதிப்புகள் குறித்தும் அதனை சரி செய்யும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

The post வேணாநல்லூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article