வேட்டையன் படம் இணையத்தில் வெளியீடு - தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் இருவர் கைது

2 hours ago 2

திருவனந்தபுரம்,

தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து உடனே அவர்களுடைய இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுகிறார்கள். இதனால் மக்கள் தியேட்டருக்கு போகாமல் தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்து பார்ப்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விடுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன.

ஆனால் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வரும் படங்களை தடை செய்யவம் முடியாமல், அந்த நிர்வாகிகளை கண்டுபிடிக்கவும் முடியாமல் போலீசாரும் திரைத்துறையினரும் திணறி வந்தனர். எந்த படங்கள் புதிதாக வந்தாலும் அதை இணையதளத்தில் ஒளிபரப்ப தடை கோரி படத்தயாரிப்பாளர்கள் தரப்பு இணையதளத்தை அணுகும். அவ்வாறு அணுகினாலும் படம் வெளியான அடுத்த சில மணி நேரத்தில் இணையதளத்தில் படம் வந்துவிடுகிறது. சில இடங்களில் தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகிகள் வீடியோ எடுப்பதை பார்த்து ரசிகர்களே போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் கூட நடந்துள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர்தான் வேட்டையன் படம் வெளியானது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் நடித்த இந்த படத்தை லைகா தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த நிலையில் படம் வெளியான சில நேரங்களில் வேட்டையன் படம் இணையத்தில் வெளியானது. அஜயண்டே ரண்டம் மோஷனம் என்ற மலையாள படத்தின் சட்டத்திற்கு புறம்பான காப்பியையும் டெலிகிராமில் ரிலீஸ் செய்ததாக தமிழ் ராக்கர்ஸ் நிறுவன நிர்வாகிகள் இருவரை கொச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் குமார், குமரேசன் என்பது தெரியவந்துள்ளது. இருவரையும் பெங்களூரில் வைத்து கைது செய்தனர். அது போல் குருவாயூர் அம்பலநடையில் என்ற மலையாள படத்தையும் இவர்கள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article