'வேட்டையன்' படத்தின் 'ஹண்டர் வண்டார்' பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு

3 months ago 23

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியானது. படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை படக்குழு பகிர்ந்தது.

வேட்டையன் படத்திற்கு தணிக்கைக் குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 'வேட்டையன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இப்படத்தின் 'மனசிலாயோ' பாடல் வெளியான நிலையில், இதில் இடம்பெற்றுள்ள 'ஹண்டர் வண்டார்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Get Rajinified! The electrifying #HunterVantaar ⚡ lyric video is OUT NOW ▶️ Crank up the speakers! https://t.co/oAvzQ4KUsR #Vettaiyan ️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductionspic.twitter.com/6x43GOis24

— Lyca Productions (@LycaProductions) October 5, 2024

இப்படம் வரும் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Read Entire Article