'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' வீடியோ பாடல் வெளியானது

2 months ago 14

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இயக்குநர் த. செ. ஞானவேல் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் பயணத்தில் பயணித்த அனைவருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் வகையில், படக்குழுவினர் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கியது.

இப்படத்தில், அனிருத் இசையமைத்த 'மனசிலாயோ' பாடல் வெளியீட்டுக்கு முன்பே பெரிய கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது.

சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் சில வரிகளுக்காக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருந்தனர். பாடல் வரிகளுக்கேற்ப நடிகர்கள் ரஜினி மற்றும் மஞ்சு வாரியரின் நடன அசைவுகளும் வைரலானது. இந்த நிலையில், 'மனசிலாயோ' பாடலின் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

The much-awaited visual treat is here! #MANASILAAYO video song from VETTAIYAN ️ is OUT NOW. ▶️ Let the vibe take over again! https://t.co/o87Fut0XFA#VettaiyanRunningSuccessfully ️ in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnanpic.twitter.com/B3INHV14sH

— Lyca Productions (@LycaProductions) October 28, 2024
Read Entire Article