வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

3 hours ago 1

புதுக்கோட்டை : வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி, பட்டியலினத்தைச் சேர்ந்த முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தது.

இந்நிலையில், ’வேங்கை வயல் தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது‘ எனக் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில், சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்ததுடன், மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து வழக்கு விசாரணை, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article