முல்தான்,
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 230 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 137 ரன்களும் அடித்தன.
பின்னர் 93 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 251 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தனது 2வது இன்னிங்ஸில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் 127 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (69.44 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (63.73 சதவீதம்) 2ம் இடத்திலும், இந்தியா (50.00 சதவீதம்), நியூசிலாந்து (48.21 சதவீதம்), இலங்கை (45.45 சதவீதம்) 5ம் இடத்திலும் உள்ளன.
மேலும், இங்கிலாந்து (43.18 சதவீதம்) 6வது இடத்திலும், வங்காளதேசம் (31.25 சதவீதம்) 7வது இடத்திலும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வெற்றி பெற்ற பாகிஸ்தான் தனது வெற்றி சதவீதத்தை அதிகரித்து (30.13 சதவீதம்) 8வது இடத்தில் தொடர்கிறது. தோல்வி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி சதவீதம் குறைந்ததன் காரணமாக அந்த அணி (22.22 சதவீதம்) 9வது இடத்தில் உள்ளது.