
கான்பெர்ரா,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் டி20 தொடர் தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.